இம்ரான் கான் மீது துப்பாக்கிச்சூடு.
பாகிஸ்தான், வாஸிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஆளும் ஷெபாஷ் ஷெரிப் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். இந்த பேரணியில் திடீர் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானில் அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். இதனை அடுத்து அரசுக்கு எதிரான போராட்டத்தை இம்ரான் கான் தீவிரப்படுத்தியுள்ளார். அப்படிதான் இன்று பேரணியும் நடப்பட்ட்டது. அப்போது திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் இம்ரான் கான் கட்சியை சேர்ந்த சில அரசியல் பிரமுகர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இம்ரான் கானுக்கும் காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர் தற்போது நன்றாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ஆளும் கட்சி, தனது கட்சிக்கும், பாக்கிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே மோதலை உருவாக்கி வருவதாக இம்ரான் கான் குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவரை கூட்டம் மற்றும் கானின் பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காவலில் வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இம்ரான் கான் கட்சி ஆதரவாளர் கொல்லப்பட்டார், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். மக்களை தவறாக திசைதிருப்பி வழி நடத்திச் செல்வதால் ஆத்திரமடைந்து சுட்டதாகவும் அவர் தெரிவித்தார். தமது பின்னணியில் யாரும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.