தமிழ்நாட்டை வன்முறை களமாக மாற்ற தமிழக ஆளுநரும், அண்ணாமலையும் முயற்சிக்கிறார்கள்:சிறுபான்மை ஆணைய தலைவர் விமர்சனம்.

தமிழ்நாட்டை வன்முறை களமாக மாற்றி, வெறுப்பு அரசியலை புகுத்த தமிழக ஆளுநரும், அண்ணாமலையும் முயற்சிக்கிறார்கள் என தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.  சிறுபான்மை மக்களை பயமுறுத்தும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி வருகிறார் என்றும், தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டு வருகிறார் எனவும், இது பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்தை வெகுவாக பாதிக்கும் என  பீட்டர் அல்போன்ஸ்  குற்றம் சுமத்தினார்.

அத்தோடு, தமிழ்நாட்டை வன்முறை களமாக மாற்றி, வெறுப்பு அரசியலை புகுத்த தமிழக ஆளுநரும், அண்ணாமலையும் முயற்சிக்கிறார்கள். இதற்கு பின்னால் ஒன்றிய அரசு இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது, என தனது விமர்சனத்தை முன்வைத்தார். மேலும்,’ இடஒதுக்கீடு என்பது அனைத்து சமூக மக்களுக்கும் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு அளிப்பது மிகப்பெரிய சமூக அநீதி என தனது காட்டமான கருத்தை கூறினார் பீட்டர் அல்போன்ஸ்.