ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை உயிரிழப்பு.

உலகில் சுமார் 50 ஆயிரம் யானைகள் உள்ளன. அவற்றில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஆப்பிரிக்காவில் உள்ளன. யானைகளை அழிவில் இருந்து காக்க பல்வேறு நாடுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதனிடையே, ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானை என்ற பெருமை கென்யாவில் உள்ள டிடா என்ற யானையை சேரும். 60 முதல் 65 வயது கொண்ட இந்த யானை கென்யாவின் டிசவோ கிழக்கு தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்தது. இந்நிலையில், வயது முதிர்வு காரணமாக பெண் யானை டிடா உயிரிழந்துவிட்டதாக கென்ய வனத்துறை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பெண் யானையாக கருத்தப்பட்ட டிடா வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த நிகழ்வு வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.