அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல பயணக்கட்டுப்பாடு!

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் கூடும் நாட்களிலும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போதும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமரினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது அமைச்சர்கள் வெளிநாடு செல்ல முடியாது.

இருப்பினும், அவசர மருத்துவத் தேவைகள் அல்லது மிக அவசரமான அரசுப் பயணங்களை இந்த கட்டுப்பாடுகள் பாதிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.