ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் பதவியை இழக்கும் சூழல்.

144

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் இந்த பதவி இல்லாமல் போகும் என கூறப்படுகின்றது.

சட்டத்திருத்தத்திற்கமைய ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவியை மட்டுமே வகிக்க முடியும். அதன் பிரிவு 44  சரத்து 3இன் படி, ஒரு அமைச்சுக்கு ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றால் ஜனாதிபதி அந்த அமைச்சின் செயல்பாடுகளை 14 நாட்களுக்கு மட்டுமேமேட்கொள்ள முடியும்.எனினும் தற்போது ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக நிதியமைச்சர் பதவியையும் வகிக்கின்றார்.