தமிழ் அரசியல் கைதிகளை இன்னுமொரு தொகுதியினரை விடுவிக்கதயார்: ஜனாதிபதி தெரிவிப்பு.

தீபாவளியில் விடுவிக்கப்பட்டதைப் போல், தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத் தான் எண்ணியுள்ளார் என்று ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்தார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரச தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகல ரத்நாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதியுடன் முக்கிய சில விடயங்கள் தொடர்பில் நேரில் பேசினார்.மேலும் பொலிஸ் பதிவு பற்றி மீண்டும் ஒருமுறை ஐ.ஜிக்குப் பணிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும், தீபாவளியில் விடுவிக்கப்பட்டதைப் போல், தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி மேலும் கூறியுள்ளார்.அருகிலிருந்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்காரஇ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகலஇ யோகராஜன் ஆகியோரும் சாதகமாகக் கருத்து பகிர்ந்தனர். – என மனோ கணேசன் குறிப்பிட்டார்.