பிரித்தானியாவில் வரிகள் உயர்த்தப்படலாம் என எச்சரிக்கை

பிரித்தானியாவில் பணியில் இருந்த நிதியமைச்சர் நீக்கப்பட்டு  நேற்றைய தினம் புதிய நிதியமைச்சராக ஜெரமி ஹண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர் நாட்டின் தற்போதைய நெருக்கடியை கருத்திற் கொண்டு வரிகள் உயர்த்தப்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் பாரிய தவறுகள் இடம்பெற்றுள்ளதாக புதிய நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான நிலைமைக்கு மத்தியில் இக்கட்டான முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும் என்று அவர் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.எப்படியிருப்பினும் சில வரிகள் நினைத்ததைபடி குறைக்கப்படமாட்டாதெனவும் சில வரிகளை உயர்த்தவேண்டியிருக்கும் எனவும் ஹண்ட் தெரிவித்தார்.வாசி குவார்டெங்  வரிகள் குறைக்கப்படும் என்றும் அவை கடன்கள் வழி ஈடுகட்டப்படும் என்றும் அறிவித்திருந்தார்.எனினும் அந்த நடவடிக்கையானது பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற சுழலை ஏற்படுத்தியதென்பதனை புதிய நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானிய அரசாங்கம் தற்போது முன்னைய நிதியமைச்சரான கு அதைச் சமாளிக்கச் சிரமப்படுகிறது என அமைச்சர் வெளிப்படையாக ஊடகங்களில் தெரியப்படுத்தியுள்ளார்.பிரித்தானியாவில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட வரவு செலவு திட்டம் காரணமாக நாடு பாரிய நெருக்கடி நிலைக்கு முகம் வேண்டியிருந்தது.இதனால் பிரித்தானிய பவுண்டின் பெறுமதி வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்ததுடன் நாட்டில் கடுமையான தாக்கத்தை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.