தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்திற்கு அதிமுக முழு மனதாக ஆதரவு.

மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழு அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த இந்தி எதிர்ப்பு தீர்மானத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். எந்த காலத்திலும் தமிழை மீறி இந்தியை அனுமதிக்க மாட்டோம் என்றுமு;  தமிழ் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காக தான், இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது எனவும் தெரிவித்தார்.

மேலும், தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை அதிமுக முழு மனதாக ஆதரவு தெரிவிக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார் முன்னதாக இபிஎஸ் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுப்பட்டதால், சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.