இலங்கையிலுள்ள 3 ஹோட்டல்கள்உலகின் சிறந்த ஹோட்டல்களாக தெரிவு .

உலகின் சிறந்த ஹோட்டல்களில் இலங்கையின் மூன்று ஹோட்டல்களை உள்வாங்கப்பட்டள்ளன.

இதனை  சிட்னி மோர்னிங் ஹெரால்ட் மற்றும் மெல்போர்ன் ஏஜ் ஆகிய சுற்றுலா துறை தொடர்பிலான தகவல்களை வௌியிடும் இதழ்கள் வௌியிட்டுள்ளது.

அதன்படி, சிலோன் டீ ட்ரைல்ஸ்  (Ceylon Tea Trails),  வைல்ட் கோஸ்ட் டென்ட் லொட்ஜ் (Wild Coast Tented Lodge) மற்றும் கேப் வெலிகம (Cape Weligama) ஆகியவை பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

கேப் வெலிகமவிலுள்ள நீச்சல் குளம் உலகின் மிகவும் ஒளிச்சேர்க்கை உள்ள   நீச்சல் குளமாக இது இருக்கலாம்” என்ற கருத்துடன் உலகின் சிறந்த நீச்சல் குளத்திற்கான  விருதைப் பெற்றது.

அத்தோடு, கேப் வெலிகம ஹோட்டல் புகைப்படம் டிரவலர் இணையத்தளத்தில் அட்டைப் படமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலியா இலங்கை சுற்றுலாவிற்கு முக்கியமான சந்தையாகும்.  சிட்னி மற்றும் மெல்போர்னுக்கு இலங்கை விமானச்சேவை தடையில்லா விமானங்களை இயக்குகிறது.

கான்டே நாஸ்ட் டிராவலர் இதழின் 2022 ஆம் ஆண்டில் ஆசியாவின் மூன்று சிறந்த சுற்றுலா ஓய்வு விடுதிகளின் பட்டியலிலும்  கேப் வெலிகம சுற்றுலா ஓய்வு விடுதியும் இடம்பிடித்துள்ளது.