இலங்கையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அனுமதி

நடுத்தர வருமானம் பெறும் நாடாக இருந்த இலங்கையின் நிலைமையை குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இன்று  நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையில் காணப்படும் இக்கட்டான சூழ்நிலையில் சர்வதேச நிறுவனங்களுக்கு இலங்கைக்கு கடன் உதவிகளை இலகுவாக்கும் நோக்கில் இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடாக இருந்து குறைந்த வருமானம் பெறும் நாடாக தரம் தாழ்த்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.