மினுவாங்கொடை கொலைகள் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது.
மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் 3 பேர் வியாழக்கிழமை (6) காலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்பில் இது வரை ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்த சிலர் கமன் கெதர பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் இருந்த மூவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
இதன்போது 51 வயதான தந்தை, 23 மற்றும் 24 வயதான அவரது இரண்டு மகன்களும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தை மையபப்டுத்தி, கலேவலயில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வியாழக்கிழமை (6) சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில், மேலும் 3 பேர் சம்பவத்துடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.