நித்யானந்தா சாயலில் இருந்ததால் விபரீதம்.

நித்யானந்தா என நினைத்து, அவரது  சாயலில் இருந்த மற்றுமொரு சாமியாரின் ஆசிரமம், மக்களால்  இடித்து சேதப்படுத்தப்பட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ‘சாமியார் பாஸ்கரானந்தா’. இவர் ‘காரணம்பேட்டை ‘ அருகே ஆசிரமம் ஒன்றை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவர்  நித்தியானந்தாவில் சாயலில் இருப்பதால்,  அவர்தான் நித்தியானந்தா  என நினைத்து அப்பகுதி மக்கள் சிலர் அவரது ஆசிரமக் கட்டிடங்களை முழுமையாக இடித்து சேதப்படுத்தியுள்ளனர் எனவும், ஆசிரமத்தில் இருந்த 25 பவுன் தங்க நகைகளைச் திருடிச் செற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து உரிய நடவடிக்கைகளை  எடுக்குமாறு அவர் பொலிஸ் நிலையத்தில்  நேற்றுமுன்தினம்  புகார் அளித்துள்ளார்.