நுகேகொடையில் ரயில்-கார் விபத்து.

நுகேகொட பெங்கிரிவத்த புகையிரத நிலையத்திற்கு அருகில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

காரில் பயணித்த பெண் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

பெங்கிரிவத்த புகையிரத நிலையத்திற்கு அருகில் வசிக்கும் தம்பதியினர் இன்று (21) அதிகாலை திம்புலாகல பகுதிக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய போதே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

அவிஸ்ஸாவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த கார் மோதியுள்ளது.

புகையிரதத்துடன் மோதிய கார் சில மீட்டர்கள் முன்னோக்கிச் சென்று பெங்கிரிவத்த புகையிரத நிலையத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் கார், இரண்டு தொலைபேசி கம்பங்கள் மற்றும் புகையிரதத்தின் மின் விளக்கு ஒன்றும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.