நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

லண்டனுக்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (21) நாட்டை வந்தடைந்தார்.

மறைந்த  இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க  ஜனாதிபதி லண்டனுக்கு கடந்த 17 ஆம் திகதி சென்றிருந்த நிலையில், இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

லண்டனுக்கு சென்ற ஜனாதிபதி அங்கு புலம்பெயர் இலங்கையர்களையும் சந்தித்து புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.