எந்த நேரத்திலும் தேர்தலை நடத்தும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக, தேர்தலை நடத்துவதற்கு இன்று (புதன்கிழமை) முதல் அதிகாரம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவிவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் 2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் மற்றும் துணைப்பெயர் பட்டியல் சான்றளிக்கப்பட்டதன் பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.