• Saturday, March 28, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

பிரித்தானிய மாகாரணி மீதான அக்கறை நாட்டு மக்கள் மீது ஏன் இல்லை

By Admin Last updated Sep 20, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இலங்கையை அடிமைப்படுத்தி வைத்திருந்த மாகாராணி காலமானதையொட்டி தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ள ஆட்சியாளர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இலங்கையர் 269 பேர் உயிரிழந்த சமயத்தில் தேசிய துக்க தினத்தை அறிவிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட போராட்டத்தில் சட்டத்தரணிகள் அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி அளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதுவரை அதனை நிறைவேற்றவில்லையென குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

Catchup shows

இந்த நாட்டின் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது நல்ல விடயம். இன்று அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. எனினும் இந்த ஜனாதிபதி பிரதமராக இருந்த காலத்தில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 269 பேர் உயிரிழந்தபோது இந்த வலி அவர்களுக்கு ஏற்படவில்லை.  இந்த கவலை, இந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படவில்லை. நாட்டில் சோகத் தினத்தை அறிவிக்க அவர்களுக்குத் தோன்றவில்லை. எனினும் எம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த ஏகாதிபத்தியவாதிகளின் மாகாராணின் இறுதிக் கிரியை முன்னிட்டு தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்றுரை கதைகள் மாத்திரமே. ஸ்கொட்லாந்து பொலிஸாரிடம் அறிவிப்பதாக தெரிவித்தார்கள். மீண்டும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டார்கள். எனினும் விசில் மாத்திரமே பல்டியை காணவில்லை. வெளிநாட்டில் உள்ள பாட்டிக்காக சோகத் தினத்தை பிரகடனப்படுத்தியமை பரவாயில்லை. எனினும் இந்த நாட்டிற்குள், இந்த நாட்டு மக்கள் இரத்த வெள்ளத்தில் மிதந்து உயிரிழந்தமையை நினைவுகூர பெரிய மனது வேண்டும். ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை வழங்குங்கள். என்றார்.

மேலும் காலம் தாழ்த்தாது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள போராட்டத்தில் சட்டத்தரணிகள் அமைப்பின் ஏற்பாட்டாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார இலங்கை மக்கள் குறித்த உண்மையான அக்கறை ஆட்சியாளர்களுக்கு காணப்படுமாயின் இதனை நிறைவேற்றுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

Prev Post

வைத்தியசாலைகளில் குவியும் குப்பைகளால் மக்களுக்கு பாதிப்பு

Next Post

பணத்திற்கு விலைபோகும் சிறைச்சாலை அதிகாரிகள், தாக்குதல் நடத்த அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ்…

Mar 27, 2026

ராமநாதபுரம் தொகுதியை தொடர்ந்து பாஜகவுக்கு ஒதுக்குவதால்…

Mar 27, 2026

மட்டக்களப்பில்  இடம்பெற்ற கொடூரக் கொலை: சட்டத்தரணிகள் எவரும்…

Mar 27, 2026

பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைச் சம்பவம்:…

Mar 27, 2026

ரெலோ தலைவரின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து…

Mar 27, 2026

சுரேஷ் சாலேவை நீதிமன்றில் முன்நிலையாக்க உத்தரவு

Mar 27, 2026

ஐநா சபையின் வதிவிடப் பிரதிநிதிளை சந்தித்தார் பாராளுமன்ற…

Mar 27, 2026

தமிழர் வரலாற்று மையம் : பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ்…

Mar 27, 2026

பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு’ –…

Mar 25, 2026

மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்: ஸ்டாலினுக்கு திருமாவளவன்…

Mar 25, 2026
Prev Next 1 of 95
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.