கோழி இறைச்சிக்கு புதிய விலை.

கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, ,இன்று முதல் ஒரு கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை 1300 ரூபா முதல் 1350 ரூபா  வரையில் விற்பனை செய்யப்படும் என அச் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் சந்தைக்கு தொடர்ச்சியாக கோழிகளை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அதன் உறுப்பினர்கள் இன்று கூடவுள்ளதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவனம் கிடைத்தால் கோழி உற்பத்தி செலவை குறைக்க முடியும் என அஜித் குணசேகர சுட்டிக்காட்டினார்.