அனகாரிக தர்மபால அவர்களின் 158ஆவது நினைவு தின நிகழ்வு நுவரெலியாவிலும் அனுஷ்டிப்பு.

செ.திவாகரன்

நாட்டுக்காக அளப்பரிய சேவையாற்றியவரும் ,சிங்கள பௌத்த சமூகத்தை பாதுகாப்பதற்காக ஒரு பாரிய புரட்சியில் ஈடுபட்டிருந்த அனகாரிக தர்மபாலவின் 158ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் வைக்கப்பட்டுள்ள அனாகரிக தர்மபாலவின் உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (17) முற்பகல் இடம்பெற்றது.

இந்நிகழ்வினை சிங்கள வீர விதான அமைப்பும் நுவரெலியா இளைஞர் பௌத்த சங்கமும் இணைந்து இந்த நினைவேந்தல் விழாவையும் மலர் வணக்கத்தையும் ஏற்பாடு செய்திருந்தன.

நுவரெலியா நகரின் மத்தியில் அமைந்துள்ள தர்மபால தர்மபாலவின் திருவுருவச் சிலைக்கு நுவரெலியா நகரவாசிகள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தியதுடன், நுவரெலியா சர்வதேச பௌத்த நிலையத்தில் விகாரையின் தலைவர் கிரியோருவே தீரானந்த தேரர் அவர்களால் தர்மபால அனகாரிக தர்மபாலவின் 158ஆவது நினைவுதின ஆண்டு விழா சிறப்பு உரையையும் வழங்கினார்.