பெரியாரின் பெயரில் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தை அடித்து உடைத்த இந்து அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது

கோவை காரமடை அருகே பெரியாரின்  பெயரில் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தை அடித்து உடைத்த இந்து அமைப்பை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணார்பாளையம் பகுதியில் அருண் என்பவர் புதிதாக உணவகம் ஒன்றை துவங்கியுள்ளார்.அதற்கு பெரியார் உணவகம் என பெயர் சூட்டி விளம்பர பலகையும் வைத்துள்ளார்.

இன்று உணவகம் திறக்கப்பட இருந்த நிலையில் நேற்றிரவு கடைக்கு வந்த மர்ம நபர்கள் தாங்கள் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் எனக் கூறி கடையை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.மேலும் கோயம்புத்தூர் இந்து அமைப்பின் கோட்டை என்றும், இங்கு பெரியார் பெயரில் உணவகம் வைக்கக்கூடாது என்று எச்சரித்து உரிமையாளர் அருணை தாக்கிச் சென்றுள்ளனர்.

மர்ம நபர்கள் தாக்குதலில் காயம் அடைந்த அருண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புகாரின் பெயரில் தாக்குதல் நடத்திய 6 பேரை கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.