இந்தியாவிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் பூங்கா தேர்வு
இந்தியாவிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக வண்டலூர் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா என்பது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளன
1885 ஆம் வருடத்தில் இந்த மிருக காட்சி சாலை ஆனது நிறுவப்பட்டது. இது இந்தியாவின் முதல் பொது உயிரியல் பூங்காவாகும். இது மத்திய உயிரியியல் பூங்காவின் ஆணையத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. சுமார் 92.45 ஹெக்டேர் பரப்பளவில் மீட்பு மற்றும் மறுவாழ்வு பகுதி உட்பட 602 ஹெக்டேர் பரப்பளவில் இந்த பூங்கா பரவியுள்ளது. இந்த பூங்கா, மாநிலத்தின் விலங்கினங்களின் களஞ்சியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், முதுமலை தேசிய பூங்காவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் இரண்டாவது வனவிலங்கு சரணாலயம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில்ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடந்த தேசிய உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சிறந்த மேலாண்மை, பராமரிப்பு என்ற அடிப்படையில் 82 சதவீத புள்ளிகளைப் பெற்ற வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நாட்டிலேயே சிறந்த உயிரியல் பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.