பிரித்தானிய மகாராணியின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி: 19ஆம் திகதி தேசிய துக்க தினம்
பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்தின் மறைவுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி இலங்கை பாராளுமன்றில் செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.தேவேளை, இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என பணிக்கப்பட்டுள்ளது.