நாடு நெருக்கடியில் இருக்கும் வேளையில் இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதன் நியாயம் என்ன?M.A சுமந்திரன்

நாடு நெருக்கடியில் இருக்கும் வேளையில் இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதன் நியாயம் என்ன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் 37 இராஜாங்க அமைச்சர்கள் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், 37 இராஜாங்க அமைச்சர்களின் நியமனம் மக்கள் மற்றும் அவர்களின் போராட்டங்கள் மீதான அரசாங்கத்தின் உணர்வற்ற தன்மையையே காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் தினசரி உணவை இரண்டாகக் குறைத்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், வீதியில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வங்கிக்கு வெளியேயும் வாடிக்கையாளர்கள் வெளியே வரும்போது அவர்களிடம் பிச்சை எடுப்பதற்காக குழந்தைகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள், அதுதான் நிலைமை என்றும் நீங்கள் சென்று இராஜாங்க அமைச்சர்களை நியமித்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.