• Tuesday, April 7, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

ரணில் ஆட்சியின் அடக்குமுறை குறித்து ஜேடிஎஸ் ஐ.நாவிற்கு அறிக்கை

By Admin Last updated Sep 7, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

அதிருப்தியாளர்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் அடக்குமுறையை விபரிக்கும் அறிக்கை ஒன்றை, இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்  அமைப்பு (JDS) ஐக்கிய நாடுகள் சபைக்கு  சமர்ப்பித்துள்ளது, பாரிய கொடூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நாட்டின் இராணுவம் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்திற்கு வழக்குத் தொடரவும் பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அழைப்பு விடுத்துள்ளது.

கோட்டாபய ராஜபக்சவை வெகுஜனப் போராட்டத்தின் மூலம் பதவியில் இருந்து அகற்றி பின்னர், ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க ஒரு மாத காலத்துக்கும் மேலாக பல கடுமையான மனித உரிமை மீறல்களை மேற்கொண்டுள்ளதாக,  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்ட 11 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, அனைத்துப் பல்கலைக்கழக பிக்குகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் மாணவர் செயற்பாட்டாளர் ஹஷான் ஜீவந்த குணதிலக்க ஆகியோர் பயங்கரவாதச் சட்டத்தைப் பயன்படுத்தி 90 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதோடு, பிணையில் விடுதலையாகியுள்ள கவிஞர் அஹ்னாப் ஜசீம், பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் 3 வருடங்களுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பலாலி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சின்னையா சிவரூபனின் பெயர் பயங்கரவாதிகள் பட்டியல் இடம் பெற்றுள்ளமை ஜேடிஎஸ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் இலங்கையின் மனித உரிமை நடத்தைகள் தொடர்பான அறிக்கையை உயர்ஸ்தானிகர் முன்வைக்க உள்ளார்.

Catchup shows

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் அரசாங்கத்திற்கு பதிலளிக்க ஜெனீவா சென்றுள்ளனர்.

நாட்டை விட்டு வெளியேறும் முன் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க சர்வதேச தலையீட்டை ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் அனுமதிக்காது என தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கு ஜேடிஎஸ் வழங்கிய முழு அறிக்கை கீழே இணைப்பில்;
http://www.jdslanka.org/images/documents/25_08_2022_51st_unhrc_session_submission_jds.pdf

Prev Post

ஐ.நாவின் பரிந்துரைகளை செயற்படுத்த முடியாது, அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

Next Post

ரணில் அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு விரிவுரையாளர்கள் கடும் எதிர்ப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

கந்தளாயில் ரயிலில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் பலி

Apr 6, 2026

எரிவாயு விலை உயர்வால் மக்கள் மீண்டும் விறகு அடுப்பிற்குத்…

Apr 6, 2026

“அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடுகளும் பொய்க்…

Apr 6, 2026

உள்ளூர் கைத்தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார…

Apr 6, 2026

தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம் ஆரம்பம்

Apr 6, 2026

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான தேசிய வழிநடத்தல் குழு…

Apr 6, 2026

அரசியல்வாதி முன்மாதிரியாகவும் எளிமையாகவும் வாழ வேண்டும் எனக்…

Apr 6, 2026

மக்களின் துயரங்களை மறந்த அரசாங்கம்; எதிர்க்கட்சித் தலைவரின்…

Apr 6, 2026

இலங்கை கால்பந்தாட்ட வரலாற்றில் புதிய மைல்கல்: சம்பியன்ஸ்…

Apr 6, 2026

கொழும்பு அளுத் மாவத்தையில் எழுச்சியுடன் நடைபெற்ற ஈஸ்டர்…

Apr 5, 2026
Prev Next 1 of 102
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.