திருடர்கள், கொலைகாரர்கள் அற்ற கட்சியே நாட்டை மீட்கும்; சந்திரிக்கா குமாரதுங்க
- வீடியோ இணைப்பு -
ஊழலற்ற கொலை கொள்ளைகளில் ஈடுபட்டவர்களுக்கு வாய்ப்பு வழங்காத அரசியல் கூட்டணி ஒன்றின் ஊடாக நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியுமென இலங்கையின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய அரசியல் கட்சியில் நாட்டை நேசிக்கும் அனைவரையும் இணைத்துக்கொள்வது முக்கியமான விடயம் எனக் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, எனினும் திருடர்களையும், கொலைகாரர்களையும் அடையாளம் கண்டு அவர்களை புறந்தள்ள வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான, பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ள நவ லங்கா நிதஹாஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தை திந்து வைத்து உரையாற்றுகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
முழுநாட்டிலும் இன, மத பேதங்களை மறந்து, அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நாட்டை நேசிக்கும் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டுமென குமார வெல்கம உரையாற்றும்போது தெரிவித்திருந்தார். எனினும் ஒன்றை நான் தெரிவிக்கின்றேன். திருடர்களை இணைத்துக்கொள்ள வேண்டாமென கோருகின்றேன். தெரிவு செய்யுங்கள். கொலைகாரர்கள், திருடர்களை ஒன்றிணைத்தால் முன்கொண்டுச் செல்ல முடியாது. போராட்டக்காரர்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றார்
நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள பெரும்பாலானவர்கள் ஐந்து வருடங்களுக்கு நாட்டின் சொத்துக்களை முடிந்தவரை கொள்ளையடித்து, மக்கள் தொடர்பில் சிந்திக்காது தன்னை வளர்த்துக்கொண்டு வெளியேறிவிட வேண்டுமென்ற எண்ணத்திலேயே செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதன்போது வலியுறுத்தினார்.