அமைச்சர்களை நியமிப்பதற்கு பசில் ராஜபக்ஷவே பட்டியல் அனுப்புகிறார்: சஜித் குற்றச்சாட்டு

ராஜபக்சக்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் முயற்சி நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று அமைச்சர்களை நியமிப்பதற்கு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே பட்டியல் அனுப்புகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.ஐக்கிய தேசியக் கட்சியின் வழிகெட்டவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் காக்கையிடம் இருந்து பதவிகளை எடுக்க நேரிடும் எனவும் தெரிவித்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பிணைக்கைதியாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.