18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்- தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, தெஹிவளை – மல்கிஸ்ஸ, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளுக்கும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகளுக்கும் குறித்த காலப்பகுதியில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் கொட்டிகாவத்தை – முல்லேரியா உள்ளுராட்சி சபை பகுதிக்கும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பகுதிகளுக்கும் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அம்பத்தளை நீர் நீரேற்று நிலையத்திற்கான மின்சார விநியோகத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணியினால் இவ்வாறு நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.