அதிமுக பொதுக்குழு செல்லும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல் பட உள்ளார்.
மேலும், அந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியலிருந்தும் நீக்குவதாக தீர்மானமும் செயலாக்கம் பெற்றுள்ளது.
பொதுக்குழு உத்தரவு செல்லும் என்ற உத்தரவால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தொடருகிறார். இதனால் இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல இந்த தீர்ப்பு ஓ பன்னீர் செல்வம் தரப்புக்கு பாதகமாக அமைந்துள்ளாதால் இந்த தீர்ப்பை எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.