சுகாதாரத் துறையில் அரசியல் தலையீடு, செலவை இரட்டிப்பாக்குவதாக குற்றச்சாட்டு
இலங்கையின் இலவச சுகாதார சேவைக்கென ஒதுக்கப்படும் நிதியில் ஐம்பது வீதமேனும் சுகாதார சேவையின் நோக்கத்தை அடைவதற்காக பயன்படுத்தப்படுவதில்லை என தென்னிலங்கையின் முன்னணி சுகாதார நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், இலங்கையின் சுகாதாரத் துறையில் காணப்படும் அரசியல் தலையீடுகள் மற்றும் அரசியல் நியமனங்கள் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கம் – தலைவர் – ரவி குமுதேஷ்
கட் ஆரம்பம் – 00.01
சுகாதாரத் துறையில் வீண்விரயங்களையும், ஊழலையும் எவ்வாறு தடுப்பது என்பது குறித்து நாம் தொடர்ச்சியாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றோம். நாம் இலவச சுகாதார சேவையென நினைத்துக்கொண்டிருந்தாலும், இதனை அர்த்தமுள்ளதாக எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். 100 வேலைத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் 50 வேலைத்திட்டங்கள் கூட சுகாதார சேவையின் நோக்கத்தை அடைவதில்லை. அதற்கு பிரதான காரணம் சுகாதார முறைமையோ, சுகாதார சேவையோ அல்லது சுகாதார அதிகாரிகளோ அல்ல சுகாதார முகாமைத்துவத்தில் இடம்பெறும் அரசியல் தலையீடுகளின் தவறே இதற்குக் காரணம். ஆகவே முறைப்படுத்தாமல் எவரும் விமர்சிப்பார்கள் எனின் அதனை நாம் ஏற்றுக்கொள்ளத் தயார் இல்லை. ஆகவே சுகாதார சேவையை விற்பனை செய்கின்றோமா? இல்லையா? இலாபமா நட்டமா? என்பதை விட அரசியல்வாதிகள் என்ற வகையில் சுகாதார சேவையை இடையூறு விளைவிப்பதை நிறுத்துமாறு கேட்கின்றோம். தமக்கு நெருக்கமானவர்களை பதவிகளுக்கு நியமிப்பதை நிறுத்துங்கள். தமக்குத் தேவையானவர்களை சுகாதார சேவை செயலாளர்களாக நியமிப்பதை நிறுத்துங்கள். ஒரு சரியான முறைமைப்படுத்தலின் கீழ் சுகாதார சேவை முன்னெடுக்கப்படுமாயின் தற்போதைய செலவில் 50 வீதத்தை மீதப்படுத்த முடியும்.
அரசியல் தலையீடுகள் இன்றி சரியான முறைமையின் கீழ் சுகாதாரத் துறை செயற்படுத்தப்படுமாயின் தற்போதைய செலவில் 50 வீதத்தை மீதப்படுத்த முடியுமென சுகாதார தொழில் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.