கொழும்பில் காணாமற் போன தமிழ் மாணவன்
கொழும்பில் கடந்த இரண்டு மாதங்களாக காணாமல்போயுள்ள மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தருமாறு மாணவனின் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு தனியார் கல்லூரியில் படித்து வரும் சம்சுதன் ரஷீத் எனும் மாணவன் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளார்.கடந்த இரண்டு மாதங்களாக இவர் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கப்பெறாத நிலையில், மாணவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் தாயாரின் தொலைப்பேசி இலக்கத்திற்கு 075-5100787 தொடர்புக்கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மாணவனின் தொலைபேசி மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன தொலைந்துபோனமை தொடர்பில் அவர் ஜூலை 10 ஆம் திகதி கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தாயார் தெரிவித்தார்.
இந்நிலையில்,கடந்த 10 ஆம் திகதிக்கு பின்னர் பஞ்சிகாவத்தை கால்வாய் பகுதிக்கு அருகில் அவரது அடையாள அட்டை கண்டுப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவன் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறவில்லை எனவும் காணாமல்போயுள்ள மகளை தேடித்தருமாறும் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.