கொழும்பு மட்டக்குளி பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு
கொழும்பு – மட்டக்குளி பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்குளி – அலிவத்தை பகுதியில் நேற்றிரவு இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவர், இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அலிவத்த ஹசித் என அழைக்கப்படும் ரணவக்க ஆரச்சிலாகே ஹசித்த சதுரங்க என்ற 26 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு இடையில் காணப்பட்ட பிரச்சினையே இந்த துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் குறிப்பிடுகின்றார்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்