பொங்கல் பண்டிகைக்கு வருகிறது அஜித் நடித்துவரும் 61-வது படம்.
![](https://meiveli.com/wp-content/uploads/2022/08/Untitled-design-2022-05-31T120356.947-16539789253x2-1.jpg)
அஜித் நடித்துவரும் 61-வது படத்தை பொங்கல் பண்டிகைக்கு ஒரு முன்னணி விநியோக நிறுவனம் வெளியிடுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் அவரின் 61-வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அந்தப் படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.
மேலும் தமிழகத்தில் தற்போது அதிக படங்களை விநியோகம் செய்து வரும் முன்னணி நிறுவனம் அந்தப் படத்தை வெளியிடுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று முடிந்துள்ளதாகவும் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்
பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்துவரும் வாரிசு படமும் வெளியாகவுள்ளது. இதானல் நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித் – விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இறுதியாக அஜித்தின் வீரம் – விஜயின் ஜில்லா ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.