இலங்கைக்கு டொலர்களை வழங்க தயாராகும் புலம்பெயர் தமிழ் அமைப்பு.
பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்குத் தேவையான டொலர்களைக் கண்டுபிடிக்க புலம்பெயர் தமிழ் மக்கள் தயாராக இருப்பதாக அண்மையில் தடை நீக்கப்பட்ட குளோபல் தமிழ் மன்றம் தெரிவித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது தயாரிக்கப்பட்ட அரசியலமைப்பு வரைபு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமென அதன் பேச்சாளர் சுரேன் சுரந்திரன் தெரிவித்துள்ளார்.குளோபல் தமிழ் மன்றம் உட்பட ஆறு அமைப்புகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 316 பேர் மீதான தடை சமீபத்தில் நீக்கப்பட்டது.
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டை கருத்திற்கொண்டு தடை நீக்கப்பட்டதாக தாம் நம்புவதாக பிரித்தானியாவில் இருந்து குளோபல் தமிழ் மன்றத்தின் பேச்சாளர் சுரேன் சுரந்திரன் சிங்கள ஊடகமான்றுக்கு கருத்து வெளியிட்டபோது இதனை குறிப்பிட்டுள்ளார்.