ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன்!

 

ஜெயிலர் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், உள்ளிட்டோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு 22-ம் தேதி தொடங்கியது. இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்று செய்தி ஏற்கனவே வெளியாகியிருந்தது.

அதை தற்போது தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இவர்களை தவிர ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னாவும் நடிக்கிறார். அவர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.  ஜெயிலர் படப்பிடிப்பில் தமன்னா கலந்துகொள்ளும் பொழுது, அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

ஜெயிலர் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து ஐதராபாத் உள்ளிட்ட சில இடங்களில் படப்பிடிப்பை நடத்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார் திட்டமிட்டு இருக்கிறார்.