உக்ரைனுக்கு பிரிட்டன் ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதி.

 

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு பிரிட்டன் ஆதரவளிப்பதாக மீண்டும் உறுதி அளித்துள்ளார்.

கிரிமியா உச்சி மாநாட்டில் பேசிய ஜான்சன், ரஷ்யாவின் கிரிமியாவையோ அல்லது வேறு எந்த உக்ரேனிய பிரதேசத்தையோ இணைத்ததை நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டோம் என்றும் கூறினார்.

ரஷ்யா இந்த கொடூரமான போரை முடிவுக்கு கொண்டுவரும் வரை உக்ரேனிய நண்பர்களுக்கு தேவையான அனைத்து இராணுவ, மனிதாபிமான, பொருளாதார மற்றும் இராஜதந்திர ஆதரவையும் நாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.