பிரதமர் போட்டியில் பின்னடைவைச் சந்தித்துள்ளார் ரிஷி சுனக்

பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக்.

கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் லிஸ் ட்ரஸ், ரிஷியைவிட 32 புள்ளிகள் முன்னணி வகிக்கிறார்.

சமீபத்தில் 961 கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 60 சதவிகிதம் பேர் லிஸ் ட்ரஸ்ஸை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்கள். ரிஷிக்கோ, வெறும் 28 சதவிகிதம் பேரின் ஆதரவுதான் கிடைத்துள்ளது.எனவே ரிஷி பிரதமராகும் வாய்ப்பு நழுவுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.