விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்துக்கு 4 சர்வதேச விருதுகள்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி ஜோடியாக நடித்து கடந்த ஜூன் மாதம் திரைக்கு வந்த மாமனிதன் படம் பிரபலங்களின் பாராட்டை பெற்று சர்வதேச அளவிலும் விருதுகளை குவித்து வருகிறது.

ஏற்கனவே டோக்கியோ திரைப்பட விழாவில் மாமனிதன் படம் திரையிடப்பட்டு சிறந்த ஆசிய படத்துக்கான தங்கப் பதக்கம் விருதை வென்றது. இந்த நிலையில் தற்போது பூட்டான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவிலும் மாமனிதன் படம் திரையிடப்பட்டது.

இந்த திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த டைரக்டர், சிறந்த சர்வதேச படம், சிறந்த குடும்ப திரைப்படம் ஆகிய 4 பிரிவுகளில் மாமனிதன் படம் விருதுகளை பெற்றுள்ளது. இந்த தகவலை டைரக்டர் சீனுராமசாமி தெரிவித்து உள்ளார். மாமனிதன் படம் சர்வதேச அளவில் விருது பெற்று வருவது விஜய்சேதுபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது