சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை வழங்க நீதிபதி உத்தரவு

சாதி, மதம் இல்லையென சான்றிதழ் வழங்கக்கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மனோஜ் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர், மனுவில்,காதல் திருமணம் செய்து கொண்டதால் மகனை பள்ளியில் சேர்ப்பதற்காக சாதி, மதம் இல்லையென சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளேன். ஆனால் சான்றிதழ் பெறுவதற்கு தாமதமாகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் இன்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.அப்போது, விசாரணையில் சாதி, மதம் இல்லையென சான்றிதழ் வழங்க அம்பத்தூர் வட்டாட்சியர் ஒப்புக்கொண்டதாக அரசு வழக்கறிஞர் குறிப்பிட்டார். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 வாரங்களுக்குள் சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.