புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை ஒரு சூழ்ச்சியே: சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவிப்பு
6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 300 தனிநபர்கள் மீதான தடையை நீக்கும் அரசின் செயற்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சர்வகட்சி ஆட்சிக்குள் கொண்டு வருவதற்கான சூழ்ச்சியாக இருக்கலாம் என சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையைக் கேட்டறிவதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்துக் கட்சி அரசில் இணைய முடியும் என்றும் அவர் கூறுகிறார்.வெளிநாடுகளில் விடுவிக்கப்படாத மில்லியன் கணக்கான டொலர் நிதி, தடை நீக்கப்பட்டுள்ள அமைப்புக்கள் வெளிநாடுகளில் விடுவிக்கப்படாத மில்லியன் கணக்கான டொலர் நிதியை வடக்கு, கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடிய திறன் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.அவ்வாறு செய்ய முடிந்தால் இலங்கை எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என்றும், ஆனால் அப்படி நடக்குமா என்று கூற முடியாது என்றும் அவர் கூறினார்.
எனினும், அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கையின் டொலர் நெருக்கடியை புலம்பெயர் தமிழர்களுக்குச் சொந்தமான பணத்தில் இருந்து தீர்க்க முடியும் என தெரிவித்திருந்தது. இது குறித்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து பிரேரணையை சமர்ப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தற்போதைய அரசாங்கம் வழங்கியிருந்த வாக்குறுதிகளுக்கு அமையவே, தடை செய்யப்பட்டிருந்த புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக, எதிர்க்கட்சியின் பிரதமக் கொறடா லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.