சீனக் கல்பல் விவகாரம்: சவாலை சமாளிக்க தயார்: இந்தியா எச்சரிக்கை

நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமையும் எந்த சவால்களையும் சமாளிக்க இந்தியா நன்கு தயாராக உள்ளது என்று இந்தியாவின் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவுக் கப்பலை தனது கடற்பகுதியில் நிறுத்த இலங்கை அரசு அனுமதித்ததை நிலையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.சென்னையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் எந்த வகையான சூழ்நிலையையும் திறம்பட கையாள இந்தியா தயாராகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.