தேசிய கட்சியுடன் தான் கூட்டணி: டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தலில், பாஜக, காங்கிரஸ் என இரு தேசிய கட்சிகளில் ஒரு கட்சியுடன் தான் கூட்டணி என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று அவர்கள் கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.வரப்போவது நாடாளுமன்ற தேர்தல், அதில் இரண்டு பெரிய கட்சிதான் இருக்கிறது. ஒன்று காங்கிரஸ், இன்னொன்று பி.ஜே.பி, அதில் யாரேனும் ஒரு பிரதமர் வேட்பாளர் தான் ஜெயிக்கபோகிறார்.

நாம் மாநில கட்சி. நம்மிடம் இருந்து ஒரு பிரதமர் வேட்பாளரை நிறுத்த முடியாது.
ஆகவே, வர போகும், நாடாளுமன்றத் தேர்தலில், ஒன்று இரு தேசிய கட்சிளில் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து தான் அமமுக தேர்தலை சந்திக்கும். நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சிக்கு ஓர் அணில் போல உதவி செய்ய போகிறோம்.’ என டிடிவி தினகரன் தனது கூட்டணி வியூகம் குறித்து  தெரிவித்தார்