பிரித்தானிய ஹாரி பாட்டர் எழுத்தாளர் ஜே கெ ரோலிங்கிற்கு கொலை மிரட்டல்

இந்தியாவில் பிறந்த பிரபல பிரித்தானிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் ஏற்படுத்தியுள்ள பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு பிரபலத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் பிரபலமான ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய  ஜே கெ ரோலிங்  என்னும் பிரித்தானிய எழுத்தாளருக்குத்தான் தற்போது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான் ருஷ்டி தாக்கப்பட்ட விடயம் தன்னை வருத்தமடையச் செய்ததாக தெரிவித்திருந்த ரௌலிங், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.  அதைத் தொடர்ந்துதான், கவலைப்படாதே, அடுத்தது நீதான் என ட்வீட் செய்துள்ளார் ஒருவர்.

அத்துடன், சல்மான் ருஷ்டியைத் தாக்கியவரை அந்த நபர் புகழ்ந்தும் இருக்கிறார். இந்த மிரட்டல் குறித்து ரௌலிங் பொலிஸில் புகாரளித்துள்ள நிலையில், பலரும் அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள்.  நியூயார்க் நகரில் உரையாற்ற சென்றிருந்த சல்மான் ருஷ்டிபோது  நூற்றுக்கணக்காபார்வையாளர்களுக்கு மத்தியில்   ஒருவர் திடீரென மேடையில் ஏறி சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ருஷ்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபரை போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சல்மான் ருஷ்டி மீது தாக்குதல் நடத்திய நபர் 24 வயதான ஹடி மடர் என்பதும், நியூ ஜெர்சியைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடடத்தக்கது.