புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை.

கடந்த காலங்களில் இலங்கையில்  தடை செய்யப்பட்ட 06 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

 

பிரித்தானியாவை தலமாக கொண்டு இயங்கும் உலக தமிழர் பேரவையும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும் தடை பட்டியலில் இருந்து அரசாங்கம் நீக்கியுள்ளது.

 

பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் கனேடிய தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட 6 அமைப்புகளும் 316 நபர்கள் மீதான தடையை நீக்கி பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

உலக தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனடியத் தமிழர் பேரவை, அவுஸ்ரேலியத் தமிழர் பேரவை, கனடியத் தமிழ் தேசியப் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஆகியன பாதுகாப்பு அமைச்சினால் தடை செய்யப்பட்டன.

வடக்கின் நல்லிணக்கச் செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்திக்கு அவர்களின் ஆதரவு வேண்டும் என அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியது.

இதனை அடுத்தது 2014 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கிய நிலையில் 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் அவர்கள் மீதான தடையை அறிவிதித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.documents.gov.lk/files/egz/2022/8/2291-02_T.pdf