கொழும்பு வருகின்றது மற்றுமொரு கப்பல்.

 

100,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய் தாங்கிய கப்பல் இன்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த மசகு எண்ணெய் நாளை தரையிறக்கப்படும் எனவும் ட்விட்டர் பதிவில்   குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 120,000 மெட்ரிக் டொன் மசகு எண்ணெய் தாங்கிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 23 முதல் 29ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு மசகு எண்ணெய் கப்பல்களும் ரஷ்யாவில் இருந்து அனுப்பப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.