தென்மேற்கு பிரான்சில் ‘அசுரன்’ காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராட்டம்

1,000 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தென்மேற்கு பிரான்சில் ‘அசுரன்’ காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர், இது ஏற்கனவே கிட்டத்தட்ட 7 ஆயிரம் ஹெக்டேர்  காடுகளை அழித்துவிட்டது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

போர்டாக்ஸ் நகருக்கு அருகே ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான வீடுகள் எரிந்து நாசமானது மற்றும் 10ஆயிரம் குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது ஒரு அரக்கன்’ என்று தீயணைப்புப் படையின் பிரதிநிதி கிரிகோரி அலியோன் பிரான்சின் கூறினார்.

பலத்த காற்றும், அதிக வெப்பமும் தீயை அணைக்கும் பணிக்கு இடையூறாக உள்ளது என்றும், ஆஸ்திரியா, ஜேர்மனி, கிரீஸ், போலந்து மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் தீயை அணைப்பதில் பிரான்சுக்கு ‘உதவி செய்ய’ வருவதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்தார்.
இந்த கோடையில் பிரான்ஸ் மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் கொடிய காட்டுத்தீ அலைகளைக் கண்டுள்ளன. இது கண்டம் முழுவதும் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலை மற்றும் வறட்சியால் தூண்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் வெப்பம் காரணமாக 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளன.