திருநங்கைத் தம்பதியினர் குழந்தை பெற்றுள்ளனர்.

டான்னா சுல்தானா என்பவர் ஒரு கொலம்பிய மாடல் ஆவார். தென்அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அவர் ஆணாகப் பிறந்து   தற்போது  பெண்ணாக மாறியுள்ளார்.அதேபோன்று அவரது கணவர் எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியுள்ளார்.

இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் இயற்கை முறையில் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடிவெடுத்தனர்.இதனிடையில் கணவர் எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறி இருந்தாலும் அவரது உடலில் கர்ப்பம் தரிப்பதற்கான பெண் உறுப்புகளை அவர் அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.அதனைத்  தொடர்ந்து எஸ்டெபன் லாண்ட்ரா கர்ப்பமானார். தன் கணவர் கர்ப்பமாக உள்ள புகைப்படங்களை சுல்தானா சமூகவலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். பின் அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இச்சம்பவம் பலரையும் பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இந்நிலையில் ‘சுல்தானா மற்றும் எஸ்டெபன் இருவருக்கும் இயற்கையான பிறப்பு உறுப்புகள் இருப்பதால் இந்த தம்பதியினர் தங்களது குழந்தையை இயற்கையாக கருத்தரிக்க முடிந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன் இது முதன் முறையல்ல எனவும், கடந்த  2020 ஆம் ஆண்டு அமெரிக்காவில்  பெண்ணாக பிறந்து பின் ஆணாக மாறிய ஒருவர் இது போன்று குழந்தை பெற்றெடுத்துள்ளார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.