ஜனாதிபதி ரணிலின் வீட்டிற்கு தீ வைத்ததன் சேதம் 205 மில்லியன்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்ததன் ஊடாக இதுவரை கணக்கிடப்பட்ட சேதம் 205 மில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாக இன்று கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரதமராக இருந்த போது பயன்படுத்திய உத்தியோகபூர்வ காருக்கு 191 மில்லியன் ரூபாவும், வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் 14.5 மில்லியன் ரூபா எனவும் சட்டமா அதிபர் சார்பில் அரசாங்கத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இச்சம்பவத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்காவது சந்தேகநபரான அருள் பிரகாஷை குரல் பரிசோதனைக்காக எதிர்வரும் 12 ஆம் திகதி அரசாங்க பரிசோதகர் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறும் கோட்டை நீதவான் திலின கமகே சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.