வந்தே பாரத் திட்டத்தை எதிர்த்து திருச்சியில் இன்று ஆர்ப்பாட்டம்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலைய வாயிலில் வந்தே பாரத் திட்டத்தை எதிர்த்து எஸ்.ஆர்.எம்.யூ வினர் இன்றுஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வந்தே பாரத் என்ற பெயரில் 200 அதிவிரைவு ரயில்களை தனியாருக்குத் தாரை வார்க்கும் முடிவை கைவிடக் கோரியும்,பணமாக்கல் என்ற பெயரால், ரயில் நிலையங்கள், மின்பாதை அமைப்புகள், கொங்கன் ரயில்வே, சரக்கு நிலையங்கள், சரக்குப் பாதை, உற்பத்தி, பராமரிப்பு பணிமனைகள் உள்ளிட்ட பொது மக்கள் சொத்துக்களை விற்பதை கண்டித்தும் திருச்சி ஜங்ஷன் விரைவில் நிலையம் வி.ஐ.பி. லாஞ்ச் முன் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ மண்டலத் தலைவர் சி. ஏ. ராஜா ஸ்ரீதர் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார்.

கோட்டச் செயலாளர் வீரசேகரன் முன்னிலை வகித்தார். இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான ரயில்வே தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் போது ‘ரயில்வே தொழிலாளர்களின் நிரந்தர வேலை வாய்ப்பை பறித்து,குறுகிய கால, ஒப்பந்த ஊழியர்களை புகுத்தாதே,  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்,2004 க்கு முந்தைய ஓய்வூதியத்தை அனைவருக்கும் வழங்கிடு என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.