நாட்டை மீள கட்டியெழுப்ப புலம்பெயர் தமிமர்களின் உதவிகளை எதிர்பார்க்கின்றோம்: ஜனாதிபதி அறிவிப்பு

தமிழ் மக்களுக்கு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, அரசியல் தீர்வை வழங்க வேண்டியது அத்தியாவசியமாகும்’  என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.அத்துடன், நாட்டை மீள கட்யெழுப்ப வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் உதவிகளை பெறுவதற்கு எதிர்பார்க்கின்றோம் எனவும் ஜனாதிபதி கூறினார்.

9 ஆவது நாடாளுமன்றத்தின் 3 ஆவது கூட்டத்தொடரை இன்று ஆரம்பித்துவைத்துஇ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.உலகில் எல்லா நாடுகளும் இலங்கையின் நட்பு நாடுகள்தான். இலங்கைக்கு எதிரிகள் கிடையாது. எந்தவொரு அணியையும் நாம் சார்ந்து இருக்கவில்லை. எல்லா நாடுகளுடனும் நல்லுறவை பேணும் வகையிலான வெளிவிவகாரக் கொள்கை முன்னெடுக்கப்படும்.

அறவழி போராட்டக்காரர்களை நான் வேட்டையாடுவதாக விமர்சிக்கின்றனர். அறவழி போராட்டக்காரர்களை நான் வேட்டையாடவில்லை. அவர்களை பாதுகாப்பேன். சட்டத்தை கையில் எடுத்து, வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.