ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டார் சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எழுத்து மூல அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார்.
அதன்படி சர்வகட்சி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் ஜனாதிபதி அனைவருக்கும் பகிரங்க அழைப்பினை விடுத்திருந்தார்.இந்த நிலையிலேயே குறித்த அழைப்பினை சஜித் பிரேமதாச ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். இதேவேளை சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஆளும் தரப்பிலுள்ள கட்சிகளுடன் ஜனாதிபதி பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.