சிறுநீரக நோய்
அறிகுறிகளைக் கொண்டு சிகிச்சைக்கு ஆயத்தமாதல்!
மனிதனுக்கு சிறுநீரகங்கள் மிகவும் முக்கியமானவை. இவை ரத்தத்தில் இருந்து நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சிறுநீரக நோய்க்கான ஆரம்பகால அறிகுறிகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.
பயங்கர சோர்வு
நீங்கள் எந்நேரமும் சோர்வுடன் இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரக நோயின் அறிகுறிகளுள் ஒன்று. சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது எரித்ரோபொய்டின் என்னும் ஹார்மோனை உருவாக்குகின்றன.
இந்த ஹார்மோன்கள் உடலுக்கு ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்கச் சொல்கிறது. ஆனால் சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருந்தால், இந்த ஹார்மோன்கள் குறைவாக சுரக்கப்படும்.
இதனால் உடலுறுப்புக்களுக்கு ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைந்து, விரைவில் சோர்வடையச் செய்யும்.
உடலில் அளவு மிகுந்த குளிர்ச்சி
மற்றவர்கள் மிகவும் வெதுவெதுப்பான சூழலை உணரும் போது, நீங்கள் மட்டும் மிகவும் குளிர்ச்சியாக இருப்பதை உணர்ந்தால், அது சிறுநீரகத்தில் உள்ள பிரச்சனைக்கான அறிகுறிகளுள் ஒன்று.
சிறுநீரக நோய் இருந்தால், இரத்த சோகை பிரச்சனையை சந்திக்கக்கூடும். இரத்த சோகை இருப்பவர்கள் தான் எல்லா நேரத்திலும் குளிர்ச்சியை உணர்வார்கள்.
மூச்சுத் திணறல்
மூச்சுத் திணறல் இரண்டு வழிகளில் சிறுநீரகங்களுடன் தொடர்புடையது. முதலில், நுரையீரலில் அதிகளவிலான திரவம் தேங்கியிருப்பது. மற்றொன்று உடலில் ஆக்ஸிஜனைச் சுமக்கும் சிவப்பு இரத்த அணுக்களின் அளவு குறைவாக இருப்பது. இதன் விளைவாகவே சிறுநீரக நோய் உள்ளவர்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை சந்திக்கிறார்கள்.
கடுமையான சரும அரிப்பு
சிறுநீரகங்கள் தான் இரத்தத்தில் இருந்து கழிவுகளை பிரித்து நீக்குகின்றன.
எப்போது சிறுநீரங்கள் இச்செயலை சரிவர செய்யாமல் இருக்கிறதோ, அப்போது இரத்தத்தில் நச்சுக்களின் அளவு அதிகரித்து, கடுமையான சரும அரிப்பை உண்டாக்குகின்றன.
கை, கால்களில் வீக்கம்
சிறுநீர் கழிப்பதில் சிக்கல்:
சிறுநீர் கழிக்கும் முறையில் மாற்றத்தைக் கண்டால், அதுவே சிறுநீரக நோயின் முதல் அறிகுறியாகும்.
கடுமையான முதுகு வலி
சிறுநீரக நோய் அல்லது சிறுநீரக தொற்றுக்கள் இருந்தால் கீழ் முதுகு பகுதி மற்றும் அடிவயிற்றின் இரண்டு புறத்திலும் வலி இருக்கும்.
அதேபோல சிறுநீர் குழாயில் கற்கள் இருந்தால், முதுகு வலி ஆரம்பித்து அது அப்படியே இடுப்பு பகுதியிலும் வலியை பரப்பக்கூடும்.